Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்ற தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தனது மகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தார். இவர் மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டப்பாறை அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.

அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி ‌ திருமலைசாமி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் திருமலைசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திருமலைசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |