உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார்.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒருநாள் காவல் அதிகாரியாக புதுச்சேரி காவல்துறை நியமித்துள்ளது. NCC மாணவியான நிவேதா என்.சி.சி. உடையில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் வந்தார். அப்போது காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, காவல் நிலைய அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர்.