Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு…. எல்லாம் சரியா நடக்குதா…. ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு….!!

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்உதவியை சரியாக பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்  சார்பாக ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று  நடைபெற்றுள்ளது . இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியது, நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன.

அதில்  5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்ட நிலையில்,அவர்கள் வாங்கிய கடன்உதவியை  சரியாக பயன்படுத்தி கொண்டார்களா என்பதை பற்றியும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

அதே போல் சிறு தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு  மாவட்ட தொழில் மையம்  இணைந்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான சமையலுக்கு தேவையான காய்கறிகள்,பலசரக்கு கடைகள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வைக்கலாம், பெரிய அளவிலான தொழில்கள், சிறு தொழில், நடுத்தர தொழிலில் எந்த வகையான தொழில் மகளிர் சுயஉதவி குழுக்கள் செய்கிறார்கள் என்பது குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

மேலும் பொது மக்கள் பயன்படுத்தும் பேவர் பிளாக், எழுவதற்கு பயன்படும் அட்டைகள், கால் மிதி மேட் போன்ற  பொருட்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள்  தயார்செய்து விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த கூட்டத்தில் உமாமகேஷ்வரி, உதவி திட்ட அலுவலர்கள், அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |