Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் பிறந்தநாள்”…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் கட்டிட தொழிலாளியான மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தன்சிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தன்சிகாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது  மகேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த ஜெய்ஸ்ரீ மகேந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது தாய் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரணி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று மகேந்திரன் பரிதவமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |