Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… அலட்சியம் வேண்டாம்…. செலவு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!! எதிர்பாராத வகையிலே நிதிநிலை உயரும்.  நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்யவேண்டியிருக்கும்.

பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுங்கள் அது போதும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருங்கள். இன்று பணத் தேவை கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் செலவும் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து  காரியமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |