Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மகப்பேறு நிதிக்காக” ரூ.2000 லஞ்சம் கேட்ட செவிலியர்…. பொறி வைத்து பிடித்த போலீசார்….!!

கரூரில் கர்பிணியிடம் ரூ 2000 லஞ்சம் வாங்கிய செவிலியரை கைது செய்துள்ள  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருபவர் பழனியம்மாள். இந்நிலையில் சின்னமணிபட்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக பழனியம்மாளிடம் விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமதி கரூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இளமதியிடம் இரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை இளமதி பழனியம்மாளிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |