மகன் சிறைக்கு சென்றதால் தந்தை மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சரத்துப்பட்டியில் வைரமுத்து (55) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைபட்டு உள்ளார். இதனால் வைரமுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வைரமுத்து வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் வைரமுத்துவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வைரமுத்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரித்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.