Categories
உலக செய்திகள்

மகன் இல்லாத சமயத்தில்…. மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்… மாமனாரின் வெறிச்செயல்…!!

மாமனார் ஒருவர் மருமகளைக்  கொன்று கடற்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையை சேர்ந்த பங்கஜ் என்ற நபர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் பங்கஜ்ஜின் தந்தை கமல் ராய்க்கு இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தன் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பங்கஜ் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நந்தினியை கமல் ராய் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தன் நண்பர் இருவரின் உதவியுடன் தூங்கிக்கொண்டிருந்த நந்தினியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு கடற்கரைப்பகுதியில் தூக்கிப் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற மக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள்   உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டதோடு கமல் ராயை கைது செய்துள்ளனர். மேலும் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |