மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேக்கிலு கவுடர் தெருவில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். டி.வி. மெக்கானிக்கான இவருக்கு மாதா என்ற மனைவியும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹரிஹரன் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே ரவி மகனை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ரவியும், மாதாவும் மருத்துவமனைக்கு மாத்திரை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரன் மனமுடைந்து மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ரவியின் உறவினர் தேவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஹரிஹரன் தூக்கில் தொங்கியதை பார்த்த தேவி உடனடியாக ரவி மற்றும் தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மகன் தற்கொலை செய்தியை கேட்ட தாய் மாதாவுக்கு திடீரென நெஞ்சு வழி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாதாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து தகவலறிந்து சென்ற கூடலூர் காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட ஹரிஹரனின் உடலை மீட்டு உடற்கூராவிர்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.