Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்ததை தாங்க முடியாத தந்தை… இறுதிச் சடங்கின்போது நேர்ந்த விபரீதம்… புதுச்சேரியில் சோகம்…!!!

புதுச்சேரியில் உடல்நலக்குறைவால் மகன் இறந்த துக்கத்தை தாங்கமுடியாமல் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள்காமாலை ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜன் திடீரென உயிரிழந்தார். நேற்று காலை ராஜனின் இறுதி சடங்கு அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜனின் தந்தைக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராஜனின் தந்தை பெரியசாமியை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மகன் இறந்த துக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |