ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார்(27), நிர்மல் குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை விடுமுறை தினத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் அண்ணாதுரை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.