தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் இ.பி. காலனி பகுதியில் சவுந்தர்ராஜன்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நவீன் குமார், திருமுருகன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சவுந்தர்ராஜனும், சித்ராவும் சேர்ந்து நவீன்குமாரை அழைத்து கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த நவீன்குமாரை கரையில் காணவில்லை.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தண்ணீரில் தேடினர். ஆனால் நவீன் குமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி மங்கலம் படித்துறையில் கிடந்த நவீன்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.