பெற்றோர் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் குமார்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரியில் எம்.எஸ்.சி. படிக்கும் ஜெகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் சரியாக படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் ஜெகனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ஜெகனின் தாய் இந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.