Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை எழுப்ப சென்ற தாய்…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான கதிரவன், மணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது கதிரவனும், மணியும் இணைந்து அரிவாளின் பின்பக்கத்தால் அண்ணாமலையின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலையின் தாயார் ராசாத்தி என்பவர் சண்டையை விலக்கி விட்டு தனது மகனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து இரவு நேரம் சாப்பிட்ட பிறகு அண்ணாமலை தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை தனது மகனை எழுப்புவதற்காக ராசாத்தி அறைக்கு சென்று பார்த்த போது அண்ணாமலை இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கதிரவன் மற்றும் மணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |