அமெரிக்கா நாட்டின் உத்தா பகுதியில் வசிப்பவர் நான்சி ஹாக்கி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளோடு வசித்து வருகிறார். தனது மகனிற்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருமகளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த தாய் கர்ப்பமடைந்துள்ளார். அதாவது மகனின் குழந்தைக்கு தாயே வாடகை தாயாக மாறியுள்ளார்.
56 வயதான நான்சி மகன் மற்றும் மருமகளுக்காக கருவை சுமந்து பேத்தியை பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்சி மற்றும் அவருடைய மருமகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.