மேற்கு வங்க முதலமைச்சர் ஆக தொடர்ந்து தான் செயல்பட விரும்பினால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் என்று பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடம் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில்பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி,
மினி இந்தியாவாக கருதப்படும் பவானிபூர் பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசிப்பதாகவும், இந்தத் தொகுதியில் தான் 6 முறை வெற்றி பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேற்கு வங்க முதலமைச்சர் ஆக தொடர்ந்து தான் செயல்பட விரும்பினால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடம் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.