Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்!…. இனி எங்க நாட்டு வழியா வராதீங்க!…. ரஷ்யாவுக்கு தடைவிதித்த பிரபல நாடு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.

இந்த நிலையில் இத்தாலி வான்வெளியில் பறக்க ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், அயர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளை தொடர்ந்து இத்தாலியும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இன்று காலை கார்கிவ் நகரத்தை பிடித்த ரஷ்ய படையை வீழ்த்தி அப்பகுதியை மீட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |