சேலம் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் அத்துமீறும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கைகளின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் அனைவரையும் வரவழைத்து காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அதாவது திருநங்கைகளுக்கு காவல்துறை ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் நீங்கள் (திருநங்கைகள்) பாலியல் தொழிலை விட்டு விட வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கு திருநங்கைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.