நாளுக்குநாள் தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையில் போட்டி அதிகரித்து வருவதால் jio, வோடபோன், ஏர் டெல் ஆகிய நிறுவனங்களானது மலிவான உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சில திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த திட்டங்களில் அதிக டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் மேலும் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளுடன்கூடிய 200 ரூபாய்க்கு குறைவான ப்ரீ பெய்ட் திட்டத்தை jio, airtel மற்றும் விஐ போன்ற நிறுவனங்கள் வழங்குகிறது.
jio , airtel மற்றும் விஐ போன்றவை தினசரி டேட்டா நன்மைகள், வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் ஆகிய அம்சங்களுடன் ரூபாய்.200-க்குள் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. முன்பே நீங்கள் குறுகியகால திட்டத்தைத் தேடுகிறீர்கள் மற்றும் உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இத்திட்டங்களைப் பயன்படுத்தலாம்.
200 ரூபாய்க்கும் குறைவான விஐ ப்ரீ பெய்ட் திட்டங்கள்
ரூபாய்.179 திட்டம்: இத்திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ், 2-ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும். அத்துடன் Vi Movie மற்றும் TVநன்மைகளை வழங்குகிறது.
ரூபாய்.195 திட்டம்: இத்திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ், 2-ஜிபி டேட்டா வழங்குகிறது. இது 30 தினங்கள் செல்லுபடியாகும். இத்துடன் வோடபோன் ஐடியா பயனாளர்களுக்கு Vi Movies மற்றும் TV பலன்களை வழங்குகிறது.
200 ரூபாய்க்கும் குறைவான ஜியோ ப்ரீ பெய்ட் திட்டங்கள்
ரூ.149 திட்டம்: இத்திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 20 தினங்கள் செல்லுபடியாகும். மேலும் தினசரி 1-ஜிபி டேட்டா வரம்பை வழங்குகிறது.
ரூபாய் 179 திட்டம்: இத்திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு, 1-ஜிபி தினசரி டேட்டா வரம்பு மற்றும் 24 தினங்கள் செல்லுபடியாகும். அத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ் போன்றவற்றைப் பெறுவீர்கள்.
200 ரூபாய்க்கும் குறைவான ஏர்டெல் ப்ரீ பெய்ட் திட்டங்கள்
ரூபாய்.155 திட்டம்: இத்திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ், 1-ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ஹலோட்யூன்களை (HelloTunes) பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் மலஐம் Wynk Music-க்கான இலவச சந்தாவை பெற்று கொள்ளலாம். இது 24 தினங்கள் செல்லுபடியாகும்.
ரூ.179 திட்டம்: இத்திட்டமானது வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ், 2-ஜிபி டேட்டா மற்றும் HelloTunes-ன் கூடுதல் நன்மைகள் மற்றும் Wynk Music-க்கான இலவச சந்தா கிடைக்கும். இது 24 தினங்கள் செல்லுபடியாகும்.