ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ப்ரி பயர் கேமின் user id, password ஆகியவற்றை சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த நிலையில் user id, password திருடப்பட்டதற்காக அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.