Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா… அந்த பைக் ஸ்டண்ட்…. உச்சபட்ச ஆக்சன்…. நடிகர் அருண் விஜய் பாராட்டு….!!!

போனி கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் 3 ஆண்டுகள் காத்திருந்து இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை படம் ரிலீசாகியுள்ளது. வலிமை படம் ரிலீஸால்  திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இதில் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் முதல் நாள் காட்சிக்கு புக் செய்து இதை தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.

 

அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான வித் அருண் விஜய் படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், “அதில் எல்லா இடத்திலேயும் அஜித் சார் தான் இருக்கார் …. உச்சபட்ச ஆக்சன்… குறிப்பாக அந்த பைக் ஸ்டன்ட்… இறுதியில் ஒரு மெசேஜ்… ரசிகர்களுக்கு பெரிய விருந்து…. படக்குழுவுக்கு பாராட்டுகள்”…. இவ்வாறு அருண் விஜய் கூறியுள்ளார்.

அருண்  விஜய் அஜித்துடன் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு முதல் நண்பராகவும்  பிறகு வில்லனாகவும் நெகட்டிவ் ரோலில் பட்டையை கிளப்பியிருப்பார். அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |