இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சேமிப்புத் திட்டங்களில் மோசடிகள் எழுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தபால் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 20,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போதும், பெறும்போதும் போன் நம்பரை சரிபார்க்க வேண்டும். அதோடு சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.
சேமிப்பு கணக்கு தொடங்கியர்களிடம் பான் கார்டு இல்லை என்ற பட்சத்தில் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும். அதோடு வாடிக்கையாளர்கள் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பான் கார்டு எண்னை சரிபார்க்க வேண்டும். அஞ்சலக கணக்கை முடிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து பாஸ்புக் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவற்றை சரியாக பின்பற்றினால் மோசடி கும்பலிடமிருந்து எளிமையாக தப்பிக்கலாம்.