இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக முதலீடுகளை செலுத்துவதால் அதிக வட்டி தொகையையும் பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் குறைந்த முதலீடாக ரூ.1000 வரை கூட செலுத்தி அதிக வட்டியை பெற முடியும்.
அதனால் பெரும்பாலான மக்கள் இந்த சேமிப்புத் திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்த தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வரி சலுகையும் பெற முடியும். வங்கி சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸில் உள்ள சேமிப்பு மூலமாக கிடைக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் மத்தியில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தில் இணைவதற்கு ஆன்லைன் வாயிலாக தொடங்கலாம் அல்லது அஞ்சலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
அதனைத் தொடர்ந்து இந்த அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களின் நகலை போஸ்ட் ஆபீஸில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கி சேமிப்பு கணக்கில் பெறப்படும் அனைத்து சலுகைகளும் இங்கும் வழங்கப்படுகிறது. அதாவது டெபிட் கார்டு, செக் புக், ஆன்லைன் பேங்கிங், நெட் பேங்கிங் மற்றும் பண பரிவர்த்தனை ஆகியவை அஞ்சல் துறையில் வழங்கப்படுகிறது.