Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் ஏற்ற அடிப்படையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம் ஆகிய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்களிலுள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் அதிகளவில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் நிதியாண்டு முறையில் வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகையானது அவர்களின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டிற்கான வட்டி விகித சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது

மேலும் வட்டி சான்றிதழுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தகவல்களும் வந்துள்ளது. வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முயற்சி எடுத்து வருவதாகவும், விரைவில் வட்டி சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொண்டு அறியலாம்.

Categories

Tech |