மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய எதிர்கால திட்டங்களுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதாவது 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தது 2 குழந்தைக்கு கணக்கு தொடங்கலாம்.
இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 7.6 % வட்டி வழங்கப்படுகிறது. இதையடுத்து 21 வயதில் கணக்கை முடிக்கும்போது 3 மடங்காக தொகை வழங்கப்படுகிறது. அதன்பின் பெண்ணுக்கு திருமணம் ஆகும் நேரத்தில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மூடி விடலாம். ஆகவே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பினால் பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சமயத்தில் ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வயது சான்று ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் செல்வ மகள் சேமிப்புக் கணக்கை துவங்குவதற்கு ரூபாய் 250 செலுத்தினால் போதும். இதற்கு முன்பாக ரூபாய் 1,000 செலுத்தி கணக்கை தொடங்குவது போல இருந்தது. மாதந்தோறும் ரூபாய் 1,000த்தில் இருந்து ரூ. 1,50,000 வரை செலுத்தி பயன்பெறலாம். காசோலை, வரைவோலை வாயிலாகவும் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாகவும் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளலாம். இதற்கிடையில் டெபாசிட் செய்ய தவறிய பட்சத்தில் கணக்கு அப்படியே திருத்தம் செய்யப்படும். இந்நிலையில் வருடத்துக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.