அண்மைய காலமாக பல பேரின் கவனம் போஸ்ட் ஆபீஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. சிறு சேமிப்பு துவங்கி பிக்சட்டெபாசிட், பெண் குழந்தைகளுக்குரிய சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிககவனம் செலுத்துகின்றனர். அதேபோன்று வங்கியை காட்டிலும் இங்கு அதிகம் வட்டி வழங்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில் சேமிப்புதிட்டங்களின் கீழ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு பாஸ்புக்கை ஆன்லைனில் அணுகும் வசதியை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இ-பாஸ் புக் வசதியினை மத்தியஅமைச்சர் தேவுசின் சவுகான் துவங்கி வைத்திருக்கிறார். தபால் அலுவலக சேமிப்புவங்கி திட்டங்களுக்குரிய “இ-பாஸ்புக் வசதி” துவங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி வரும் தினங்களில் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. தபால் அலுவலக சேமிப்புவங்கி திட்டங்கள் டிஜிட்டல் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கணக்கு வைத்திருப்போர் தங்களது விருப்பப்படி பரிவர்த்தனை வரலாற்றை கண்டறிய இயலும். இதற்கென போஸ்ட்ஆபீஸுக்கு நேரில் போக வேண்டியதில்லை.
இ-பாஸ்புக்முறை:
# உங்களது ஸ்மார்ட் போனில் தபால் அலுவலக செயலியை திறந்து உள்நுழைய வேண்டும்.
# மொபைல் பேங்கிங் என்பதற்குச் சென்று, கணக்குச் சான்றுகளை உள்ளிட்டு பின் செல் என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.
# உங்களது கணக்கின் டாஷ்போர்டுக்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள். இங்கே பேலன்ஸ் மற்றும் ஸ்டேட் மெண்ட் என்பதன் கீழ் உள்ள ஸ்டேட்மெண்ட் என்பதைக் கிளிக்செய்ய வேண்டும்.
# தற்போது கணக்கு அறிக்கையையும், மினி அறிக்கையையும் காண்பீர்கள் .
# அதன்பின் நீங்கள் அறிக்கையைப் பார்க்க விரும்பும் காலத்தைத் தேர்வு செய்யவேண்டும்.
# அதனைப் பதிவிறக்கவும் செய்துக்கொள்ளலாம்.