திடீரென சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்யும் சீனிவாசன் என்பவருக்கு பெட்ரோல் சப்ளை செய்து வந்துள்ளார். இவரிடம் முருகன் 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சீனிவாசன் அடிக்கடி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடைய சொத்துக்களை சீனிவாசன் அபகரிக்கும் முயற்சி செய்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த முருகன் தன்னுடைய தாய் சாவித்திரி மற்றும் தங்கை கருணா தேவியுடன் ஆகியவுடன் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அதன்பிறகு முருகன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலால் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்ததால் சீனிவாசனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர்.