Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் தரையில் உறங்கிய… தமிழக பாஜக பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நெல்லையில் திமுக எம்பி ஞானதிரவியத்தை கைது செய்ய கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர்.

இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். பின்னர் அனைவரும் காலை 9 மணிக்கே விடுவிக்கப்பட்டனர். பாஜகவில் தலைவனும் தொண்டனுக்கும் வித்தியாசமின்றி எளிமையானவர்கள் எனக்கூறி அவரது புகைப்படத்தை பாஜகவினர் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Categories

Tech |