சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்ற 2 நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அந்த இரண்டு நபர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆத்தூர் போலீசார் அந்த இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முத்துப்பாண்டி மற்றும் சுபாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.