தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இவர் கார்த்திக் நடித்துள்ள ‘விருமன்’ படத்தில் சூரியின் காமெடி ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூரி கலந்து கொண்டு பேசிய போது, அகர அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட அன்னசத்திரத்தை விட ஒரு மாணவன் கல்வி வழங்குவது சிறந்தது என்று கூறினார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் கூறியது, நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டு தான் பேசுவேன்.
அதனை தொடர்ந்து எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டலுக்கு அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் படிக்காதவன் அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என்று அவர் கூறினார். இந்நிலையில் நடிகர் சூரி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சூரியின் கருத்துக்கள் சர்ச்சையானதால் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.