போலீஸ் பணியில் சேர உடற்தகுதி தேர்வு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் பலருக்கு ராணுவம், போலீஸ் போன்ற பணிகளில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பல்லாயிரம் கணக்கான பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியது. மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல்தகுதி தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இம்மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறுகின்றது.
போதிய பயிற்சி இல்லாததால் பலருக்கு போலீஸ் பணி கனவாகி விடுகின்றது. இதை தவிர்க்க 6 இடங்களில் ஜூலை 13ஆம் முதல் தேதி 23ஆம் தேதி வரை ஓட்டப்பயிற்சி, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவசமாக காவல்துறையினரை பயிற்சி அளிக்கின்றனர்.