Categories
மாநில செய்திகள்

போலீஸ் எஸ்ஐ தேர்வு… “இனி இது கட்டாயம்”…. புதிய ட்விஸ்ட்… வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!!

போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் திறனறிதல் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக 444 பணியிடத்திற்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். மாநில அளவில் 197 மையங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வு, மதியம் 3:30 முதல் மாலை 5 மணி வரை தமிழ் திறனறி  தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் பொது அறிவு 70 மதிப்பெண்கள், தமிழ் திறனறிதல் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்படும். போலீசில் பணிபுரிந்து கொண்டு விண்ணப்பிப்பதற்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் புதிய டிவிஸ்டை  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வைத்திருக்கின்றது. பொது அறிவு மற்றும் தமிழ் திறனறிதல் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது. முதலில் தமிழ் திறனறிதல் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் அதில் விண்ணப்பதாரர்கள் 40 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்த எடுத்துக் கொள்ளப்படுகின்றது. மேலும் தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ்ஐ தேர்வில் இருந்து நீக்கப் படுகின்றார். இதனால் தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்  மட்டுமே எஸ்ஐ ஆக முடியும் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |