மதுரையில் உள்ள கோபுதூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி என்பவர் பிடிக்கப் பட்டார். அவர் வறுமையில் உள்ள ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் உடந்தையாக இருந்த காவலர் தேவேந்திரன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் காசி ஆகியோர் போலீசில் சிக்கி உள்ளனர்.கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் கண்மணியின் 20 வயது சொந்தமகள் என்ற தகவல் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.