போலீஸ்காரரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் ஜெயசந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார், இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேன்மொழி அதிகாலை நேரத்தில் தனது உடல் முழுவதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தேன்மொழியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர் ஜெயச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.