Categories
உலக செய்திகள்

“கணவனுடன் சண்டை” காரில் பறந்த மனைவி…. விரட்டி பிடித்த போலீஸ்…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வேகமாக காரில் சென்ற பெண்ணை போலீசார் குற்றவாளியை பிடிப்பதுபோல் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர்

அமெரிக்காவை சேர்ந்த லாட்ரெஸ் கர்ரி (41)என்ற பெண் தன் கணவனுடன் நடந்த சண்டையால் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பிடிப்பதற்காக பல  போலீசார்கள்  அவரை துரத்தி இருக்கின்றனர். போலீசார் ஏதோ குற்றவாளிதான் தப்பி கொண்டு செல்கிறான் என்று எண்ணி காரை துரத்தி கொண்டு சென்றுள்ளனர் .

வேகமாக சென்ற கார் பார்க்கிங் ஒன்றை அடைந்ததும் போலீசார் துப்பாக்கியுடன் சூழ்ந்து கொண்டனர். அப்போதுதான் தலைமை காவலரான ஜேம்ஸ் ரிச்சர்ட்சன் துப்பாக்கி நீட்டியபடி அந்த காரின் ஓட்டுநர் கதவைத் திறக்கும்படி சொன்னார் அப்போது கதவு திறந்து பார்த்ததில் அங்கு இருந்தது ஒரு பெண் என தெரிய வந்தது உடனே மற்ற போலீசார்களை சைகை செய்தபடி துப்பாக்கியை கீழே இறக்க சொல்லிவிட்டு தன் துப்பாக்கியை உரையில் வைத்து விட்டார்.

அந்தப் பெண் பயந்து காரில்  அமர்ந்திருந்தார். கண்களில் மரண பயத்தில்  இருந்த அந்தப் பெண்ணை ஜேம்ஸ் ஆறுதல் படுத்தி உள்ளார் .அந்த பெண் தனது சீட்பெல்ட் கூட கழற்றாமல் நடுங்கிய நிலையில் இருந்திருக்கிறார். ஜேம்ஸ் அதை கழற்றுவதற்காக குனிய அந்த பெண்ணோ அவர் தன்னை ஆறுதல் கூறுவதாக நினைத்துக் கொண்டு உடனே ஜேம்ஸை கட்டியணைத்து கதறி இருக்கிறார். எந்த ஆபத்தும் இல்லை எங்கள் கையில் துப்பாக்கி இல்லை என்றும் அவரை ஆறுதல் படுத்தி உள்ளார்.

மேலும் ஜேம்ஸ் இதுபற்றி  கூறுகையில் அந்தப் பெண்ணை நான் ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். குற்றவாளியை பிடிப்பதற்கு இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் இந்த சம்பவம் எனக்கு கற்றுத்தந்தது என்று கூறுகிறார் .லாட்ரெஸ் மீது எந்த ஒரு குற்ற வழக்கும் இல்லை எனில் அவர் கைது செய்யப்பட்டாலும் விதிகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார் .

தனது 23 வருட பணியில் இது போன்ற அனுபவம் எனக்கு கிடைத்தது இல்லை என்று கூறுகிறார் .இந்த காட்சிகள் காவலர்கள் பொருத்தியிருந்த  கமெராவில் பதிந்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் சட்டம் தன் கடமையை செய்யும் அதே நேரம் போலீஸாரின்  இறக்க  குணத்தையும் இந்த சம்பவம் காட்டியுள்ளது.

Categories

Tech |