திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு மூலம் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாகிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சமூக விரோதிகளால் திருச்சி நவல்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த திமுக ஆட்சியில் காவலர்கள்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிதர்சனமாகிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.