சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வடுகபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கீழப்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய ரமேஷ் என்ற நபர் மது பாட்டில்கள் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரமேஷின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 35க்கும் அதிகமான மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து அரியலூரிலுள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி lபின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.