சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமம் பூவந்தி போலீஸ் சங்கத்தை சேர்ந்தது ஆகும். இந்த கிராமத்தில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்பேரில் மாணிக்கம், லட்சுமிகாந்தன், சுவித்துராஜா, தங்கமணி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.