Categories
உலக செய்திகள்

போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்…! கல்லறையில் இருந்து உடலை எடுத்ததால் … மக்கள் கடும் ஆவேசம் ..!!

மியான்மரில் நடந்துவரும் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் போலீசாருக்கு எதிராக போராடிவரும் கூட்டத்தில் ஏன்ஜெல் என்று அழைக்கப்படும்  19 வயதான கியால் சின் என்ற இளம் பெண்ணும் போராடி வந்துள்ளார். அப்போது போலீசார் சுட்டதில் அவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதனால் மக்கள் மிகவும் கொந்தளித்து உள்ளனர். மேலும் போலீசார் தங்கள் மீது தவறு இல்லை என்பதற்காக அவரின் உடலை கல்லறையிலிருந்து சில மருத்துவர்கள் மற்றும் ஒரு நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுத்துள்ளனர் .

பின் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் ஏஞ்சலின் தலையில் பின் பக்கத்தில் காயம் ஒன்றும், அதில் உலோகத் துண்டு ஒன்றும் இருந்துள்ளது .மேலும் அந்த உலோகத் துண்டு போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கியில் இருந்து வந்தது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் போராட்டக்காரர்களை முன் பக்கத்தில் இருந்துதான் தாக்கினார்கள். ஒருவேளை ஏஞ்சல் போலீசாரால் சுடப்பட்டு இருந்தால் முன்  பக்கம்தான் காயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளனர் .

ஆனால் ‘ரீயூடர்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கொல்லப்படுவதற்கு முன் ஏன்ஜெல் போலீசாருக்கு முதுகு காட்டி நிற்பது போன்று தெரிகிறது. எனவே இந்த விஷயம் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |