Categories
மாநில செய்திகள்

போலீசார் சீருடையில் ஜனாதிபதி கொடி…. “இந்த பணி கிடைத்தது தங்களுக்கு பெருமை”….. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!!!!!

ஜனாதிபதியின் கௌரவ கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் நினைவாக டிஜிபி முதல் காவலர் வரை என அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக அரசின் பேட்ஜ்  வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் கௌரவ கொடி கிடைத்திருப்பதால் அனைத்து போலீசாரும், சீருடைகளும் இனி ஜனாதிபதியின் கொடியான நிஸான் என்ற சின்னம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக லோகா இடம் பெற்ற பேட்ஜ்  திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள எடர்நல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சயின்ட் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து ஜனாதிபதி கொடி அடங்கிய பேட்ச் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். முதல் கட்டமாக 500 பேட்ஜ் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்ஜ் தயாரிக்கும் மும்பை டெல்லி தலா இரண்டு நிறுவனங்கள், சென்னையில் ஒரு நிறுவனம் மற்றும் திருப்பூரில் நால்வர் மாதிரி தயார் செய்துள்ளனர். அதில் தரம் கலர் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு லோகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லோகாவில் இடம் பெற்றுள்ள கலர் நூல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலர் கோர்ட்லா  எனும் ஊரில் தயார் செய்யப்பட்டு பின் திருப்பூரில் பேட்ஜ் தயார் செய்யப்பட்டுள்ளது.

லோகாவில் ஒன்பது கலர் இடம்  பெற்றிருக்கிறது. 17,000 எம்ராய்டரி ஸ்கெட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் பேட்ஜ் தயார் செய்ய சரியான அளவில் லேசர் கட்டிங் மூலம் துணி வெட்டி எடுக்கப்படுகிறது. அதன் பின் எம்பிராய்டரி இயந்திரத்தில் போம் துணி  உதவியுடன் பேட்ஜ் எம்பிராய்டரி செய்யப்படுகிறது. ஒரு பேட்ஜ் தயாரிக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். காவல்துறை சீருடை இடம்பெறும் ஜனாதிபதி கொடி அடங்கிய பேட்ஜ் தயாரிக்கும் பணி கிடைத்தது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக அதன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி பொங்க கூடியுள்ளனர்.

Categories

Tech |