Categories
தேசிய செய்திகள்

போலி 500 ரூபாய் நோட்டு…. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

நாட்டில் போலிநோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. சென்ற 2021ம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய்நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 % ரூபாய் 2,000 மதிப்புடையவை என தேசியகுற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ளநோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை கண்டிப்பிடிக்க சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ்வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.

போலி 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?

ரூபாய் நோட்டின் முன்பக்கம்

# ரூபாய் மதிப்பு எண்ணின் ஸீ-த்ரூ ரெஜிஸ்டர் (ஒளிபுகும்போது காட்சி தெரியும்)

# ரூபாய் மதிப்பு எண்ணின் மறை விம்பம் (மறைமுகமாக காணப்படும்)

# தேவ நாகிரி எழுத்தில் ரூபாய் மதிப்புஎண்.

# மகாத்மாகாந்தி புகைப்படத்தின் நோக்கு நிலை மற்றும் நிலையில் மாற்றம்.

# ரூபாய் நோட்டை சாய்க்கும் போது விண்டோட் செக்யூரிட்டி த்ரெட்டின் (பாதுகாப்பு தொடர் வரி) நிறம் பச்சையில் இருந்து நீலமாக மாறும்.

# உத்தரவாத விதி, உறுதிப் பாட்டு விதியைக் கொண்டுள்ள ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் போன்றவை வலதுபக்கம் நகர்த்தப்பட்டுள்ளது.

# போர்ட் ரைட் மற்றும் எலக்ட்ரோ டைப் (மின்தட்டச்சு) வாட்டர்மார்க்.

# மேல் பக்க இடதுபுறத்திலும் கீழ் பக்க வலதுபுறத்திலும் சிறிய அளவில் இருந்து பெரியளவில் காணப்படும் எண் குழு

# கீழ்பக்க வலது புறத்தில் ரூபாய்க்கான சின்னத்துடன் மாறும் வண்ணத்தில் (பச்சையிலிருந்து நீலம்) ரூபாய் மதிப்புஎண்.

# வலது புறத்தில் அசோகர் சின்னம்.

ரூபாய் நோட்டின் பின்பக்கம்

# நோட்டில் இடது புறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.

# ஸ்வச்சபாரத் லோகோவும் (சின்னமும்) அதனுடைய சொற்றொடரும் (ஸ்லோகன்).

# மத்தியில் மொழிகளின்பேனல் இருக்கும்.

# செங்கோட்டை- இந்தியகொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.

# வலது புறத்தில் தேவநாகிரியில் ரூபாய் மதிப்புஎண்.

கண்பார்வை அற்றவர்களுக்கான அம்சங்கள்:

# மகாத்மா காந்தி புகைப்படம், அசோகர் சின்னம், தொடர் வரிகள் மற்றும் அடையாள குறியீடுகள் போன்றவை அடையாளம் கண்டறியப்படும் அடிப்படையில் சற்றே உயர்ந்திருக்கும்.

# வலது புறத்தில் ரூபாய்.500 இருக்கும் வட்டம் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும்.

#வலது மற்றும் இடதுபுறம் உள்ள 5 ப்ளீட்வரிகள் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும்.

Categories

Tech |