மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோடு பொன்னகரம் 4வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (27). இவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அழகரடி 2வது தெருவை சேர்ந்த செந்தில் குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் சென்ற ஜனவரி மாதம் நகையை அடகுவைத்து ரூபாய்.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர்.
இதையடுத்து நாங்கள் அந்த நகைகளை சோதனை செய்து பார்த்த போது அது குறைந்தளவு தங்கம் கொண்ட போலி நகை என்பது தெரியவந்தது. ஆகவே நிறுவனத்தில் போலி நகையை வைத்து பண மோசடியில் ஈடுபட்ட உமா தேவி, செந்தில்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.