Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போலி இ- மெயில் : மாரிதாஸ் மீது மோசடி வழக்கு …!!

போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பியதக்க அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மாரிதாஸ் மீது திமுகவினர் உட்பட மற்ற அமைப்பினரும் புகார் அளித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அடுத்தகட்ட விசாரணை நடத்த இருப்பதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |