Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்…. வசமாக சிக்கிய ஊழியர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது.

இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுபற்றி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |