Categories
உலக செய்திகள்

போலியான தடுப்பு மருந்துகள்… மக்களே உஷார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர். 

உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில்  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதன்படி சில போலியான தடுப்பு மருந்துகள் சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது என்று பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி தடுப்பு மருந்துகள் இணையதளத்தில் விற்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக சர்வதேச புலனாய்வு துறை விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போலி மருந்துகள் 500 யூரோக்கள் முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்துமே போலியானவை. மேலும் எந்த காரணங்களுக்காகவும் இந்த மருந்துகளை மக்கள் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |