பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி கிருஷ்ணனின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கியிலிருந்து 1 கோடி ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட ஹரிகிருஷ்ணன் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காமேஷ் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.