உக்ரைன் ரஷ்யா இடையேயுள்ள போரானது தீவிரமடையும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். மேலும் இந்த போர் சமாதானத்திற்கு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் பிரார்த்தனை நடத்தி வருகிறார். செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாதிரியார்கள், பிஷப்கள், மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கடினமான அனுபவங்களை மனிதர்கள் மறந்துவிட்டதாக போப் பிரான்சிஸ் கூறினார். இந்த சிறப்பு பிரார்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளிலும் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டும் பிரார்த்தனை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்கள் எதிரெதிர் திசையில் அமர்ந்தவாறு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.