உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்ரோஷமான போர் 13-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதனிடையில் ரஷ்ய ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கடந்த 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் கர்நாடகவை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் செல்லும் போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் நவீன் இறப்புக்கு பல இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நவீன் சேகரப்பாவின் சடலத்தை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக கர்நாடகமாநில முதல்வர் பசவராஜ் பொம்மை , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “இறந்த மாணவர் நவீனின் உடல் பதப்படுத்தப்பட்டு உக்ரைன் மருத்துவமணையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் ஷெல் தாக்குதலை நிறுத்திய பின் அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்” என தெரிவித்துள்ளார்.