முதலில் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்ற தகுதி உடையவன்.
சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல எடுக்கப்படுவது.
புரட்சி இயக்கங்கள் இடையில் பிரியலாம் அழிக்கவும் படலாம். ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை.
இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும் அதற்கு ஒரே வழி போர் அதை தவிர வேறு வழியே இல்லை.
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சி கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல.
ஒரு மனிதன் வாழ்ந்தான், அவன் லட்சியத்துக்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்.