தங்களின் போராட்டம் தன்னிச்சையானது எனவும் எந்த ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலினாளோ ஆதரவிலோ தங்களது போராட்டம் நடைபெறவில்லை என்வும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் விவசாயிகளுக்கு இடையே நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாகவும், வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என பல ஆண்டுகளாக கூறிவந்த எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அகில இந்திய கிசான் சங்கம் ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த விவசாயிகள் பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தை தங்களின் போராட்டம் தன்னெழுச்சி ஆனது எனவும், தங்களின் கோரிக்கைகளுக்காக பின்னால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.